நேபாளத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 151 பேர் பலியாகியுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 151 பேர் பலியாகியுள்ளனர். 56 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் பள்ளிகள் மூடப்பட உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 40 முதல் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட இந்த வெள்ளம், பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 16 பாலங்கள் சேதமடைந்துள்ளன. மீட்பு நடவடிக்கைகளுக்கு 20,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,626 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.