கடந்த ஜனவரி 15ஆம் தேதி, நேபாளத்தில் புதிதாக திறக்கப்பட்ட பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது, எட்டி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. ஐந்து இந்தியர்கள் உட்பட 72 பேர் பேருடன் வந்த இந்த விமானம், நதியில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நேபாள ராணுவம் மீட்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. இதுவரையில், 71 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்ட ராணுவத்தினர், அதனை நேபாள விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், விமானத்தின் கடைசி நிமிட பயணம் குறித்த காணொலி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.