நேபாள அமைச்சரவையில் புதிதாக 16 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நேபாள அமைச்சரவையில் புதிதாக 16 அமைச்சர்களை பிரதமர் புஷ்பகமல் தாஹால் பிரசன்னா நேற்று இணைத்துள்ளார். முன்பாக, சேர் பகதூர் தேவுபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிபிஎன் கட்சி தலைவர் புஷ்பகமல் கடந்த ஒன்றே கால் ஆண்டுக்கு முன் ஆட்சி அமைத்தார். என்ற போதிலும், பல்வேறு கருத்து வேறுபாடுகளால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், நேபாள காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முறிந்ததாக திங்களன்று திடீரென்று பிரதமர் பிரசன்னா அறிவித்தார். முன்னாள் பிரதமர் கே.பி ஒலியின் யுஎம்எல் கட்சியுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். அதையடுத்து அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்தார். தனது கட்சியில் நான்கு பேருக்கும், யூஎம்எல் கட்சியை சேர்ந்த ஏழு பேருக்கும் அமைச்சர் பொறுப்புகளை அறிவித்தார். அத்துடன் ராஷ்டிரீய சுதந்திர கட்சியை சேர்ந்த இரண்டு பேர் மற்றும் சிபிஎன் கட்சியை சேர்ந்த இரண்டு பேருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்.