இந்தியாவுக்கு 1000 மெகா வாட் மின்சாரம் வழங்குகிறது நேபாளம்

August 20, 2024

இந்தியாவுக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை வழங்க நேபாளம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவுக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் வழங்க நேபாள அரசு முடிவு எடுத்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தெரிவித்தார். ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ராணா இந்தியாவுக்கு வந்துள்ளார். இவருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு ஜெய்சங்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை […]

இந்தியாவுக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை வழங்க நேபாளம் முடிவெடுத்துள்ளது.

இந்தியாவுக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் வழங்க நேபாள அரசு முடிவு எடுத்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தெரிவித்தார். ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ராணா இந்தியாவுக்கு வந்துள்ளார். இவருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு ஜெய்சங்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்தனர். அப்பொழுது வர்த்தகம், எரிவாயு, மக்கள் தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்தும் ஆலோசித்தனர். இந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu