ரபா மீது படையெடுப்பது உறுதி - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

March 11, 2024

ரபா மீது படையெடுப்பது உறுதி என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உறுதியளித்தார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இஸ்ரேல் ராணுவ படை ரபா நகருக்குள் செல்லும். நாங்கள் போரில் இருந்து தற்போது விலகப் போவதில்லை. அக்டோபர் 7-ல் நடந்தது மீண்டும் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். எனக்கென ஒரு சிவப்பு கோடு உள்ளது. அது என்னவென்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்களை கொன்று குவித்தனர். என்னுடைய உறுதியான முடிவுக்கு […]

ரபா மீது படையெடுப்பது உறுதி என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உறுதியளித்தார்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இஸ்ரேல் ராணுவ படை ரபா நகருக்குள் செல்லும். நாங்கள் போரில் இருந்து தற்போது விலகப் போவதில்லை. அக்டோபர் 7-ல் நடந்தது மீண்டும் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். எனக்கென ஒரு சிவப்பு கோடு உள்ளது. அது என்னவென்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்களை கொன்று குவித்தனர். என்னுடைய உறுதியான முடிவுக்கு பின் உள்ள நியாயமான காரணம் இதுவாகும். எனவே போர் தீவிரப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு எண்ணற்ற தலைவர்களின் ஆதரவு உள்ளது என்றும் அவர்கள் அமைதியாக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். ஈரானின் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியை ஹமாஸ் அமைப்பு என்று சாடியுள்ளார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் பிடென் கூறுகையில், இதுவரை 30 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்து இருக்கிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இஸ்ரேலுக்கு அவர் தீங்கிழைத்ததாகவே நான் கருதுகிறேன். இது இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கூறியுள்ளார். இதற்கு, போரானது நான்கில் மூன்று பங்கு முடிந்துவிட்டது. ஒரு மாதத்திற்குள் போர் முடிவுக்கு வந்துவிடும் என்று நேதன்யாகு பதில் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu