அமெரிக்காவின் பாலஸ்தீன கோரிக்கையை நேதன்யாகு நிராகரித்தார்

January 19, 2024

இஸ்ரேலின் எதிர்காலம் தனி பாலஸ்தீனத்திற்கு எதிரானது என கூறி அமெரிக்காவின் பாலஸ்தீன கோரிக்கையை நேதன்யாகு நிராகரித்தார். . காசா போரில் இதுவரை 25 ஆயிரம் பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. எனினும் சில தினங்களுக்கு முன் பாலஸ்தீனத்தை தனியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா இஸ்ரேலை வலியுறுத்தியது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்த போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். அவர்களிடம் உள்ள பிணைக் கைதிகளை […]

இஸ்ரேலின் எதிர்காலம் தனி பாலஸ்தீனத்திற்கு எதிரானது என கூறி அமெரிக்காவின் பாலஸ்தீன கோரிக்கையை நேதன்யாகு நிராகரித்தார்.
.
காசா போரில் இதுவரை 25 ஆயிரம் பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. எனினும் சில தினங்களுக்கு முன் பாலஸ்தீனத்தை தனியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா இஸ்ரேலை வலியுறுத்தியது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்த போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். அவர்களிடம் உள்ள பிணைக் கைதிகளை மீட்க வேண்டும். இந்த போரில் எங்களுக்கு முழு வெற்றி கிடைக்கும் வரை தொடரும். எனவே இது சில மாதங்கள் நீடிக்கலாம். ஜோர்டான் நதிக்கு மேற்கே உள்ள நிலப்பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது பாலசீனத்தையும் சேர்த்தே குறிக்கும். இஸ்ரேலின் எதிர்காலம் தனி பாலஸ்தீனத்திற்கு எதிரானது. இதை நான் அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டேன். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தீமை விளைவிக்க கூடிய எந்த ஒரு நிலைப்பாட்டையும் எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu