இஸ்ரேல் போர் அமைச்சரவை கலைப்பு

June 18, 2024

காசா போர் குறித்த முடிவுகளை எடுக்க அனைத்துக் கட்சிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட போர் அமைச்சரவையை இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு உருவாக்கி இருந்தார். காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1200 பேரைக் கொன்றனர். 250க்கும் மேற்பட்டோரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. காசா மீது […]

காசா போர் குறித்த முடிவுகளை எடுக்க அனைத்துக் கட்சிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட போர் அமைச்சரவையை இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு உருவாக்கி இருந்தார்.

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1200 பேரைக் கொன்றனர். 250க்கும் மேற்பட்டோரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. காசா மீது போர் தொடுக்கும் விவகாரத்தில் இஸ்ரேலின் முழு ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும் என்று நேதன்யாகு விரும்பினார். எனவே போர் குறித்த முடிவுகளை எடுக்க அனைத்துக் கட்சிகள் அடங்கிய போர் குழுவை உருவாக்கினார். இதற்கு அவர் தலைமை தாங்கினார்.

இந்நிலையில் இந்த போர் அமைச்சரவை இன்று கலைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த போர் அமைச்சரவையில் இருந்து முன்னாள் ஜெனரல் பென்னி கான்ட்ஸ் மற்றும் காடி ஐசன்கோர்ட் ஆகியோர் சமீபத்தில் வெளியேறினர். இதனால் பிரதமர் நேதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu