அமேசான் நிறுவனம் சார்பில் வரும் அக்டோபர் மாதத்தில் ரிமார்க்ள் அலெக்சா கருவி அறிமுகம் செய்யப்படுகிறது இது அமேசானின் சொந்த செயற்கை நுண்ணறிவில் உள்ள வரம்பு சிக்கல்கள் காரணமாக Anthropic AI நிறுவனத்தின் Claude AI மாடலால் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
“புதிய அலெக்ஸாவில், AI உருவாக்கிய செய்தி சுருக்கங்கள், குழந்தை-சார்ந்த சாட்பாட் சேவைகள் மற்றும் உரையாடல், ஷாப்பிங் கருவிகள் ஆகியவை கொடுக்கப்படுகிறது. இது, $5-10 மாதாந்திர சந்தாவின் மூலம் வழங்கப்படலாம். தற்போதைய "கிளாசிக் அலெக்ஸா" இலவசமாகவே இருக்கும்” என்று முன்னாள் அலெக்ஸா AI விஞ்ஞானி மிஹைல் எரிக் தெரிவித்துள்ளார். மேலும், Anthropic நிறுவனத்தில் $4 பில்லியன் முதலீடு செய்த போதிலும், அமேசானின் AI தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.