எஸ். அல்லி, சென்னை ஐகோர்ட்டின் தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி, சென்னையின் ஐகோர்ட்டின் தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை பதிவாளர் ஜோதிராமன், தற்போது ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜி மற்றும் ஜாபர் சாதிக் போன்ற முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.