சீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூழ்கியது

September 28, 2024

கப்பல் கட்டுமான பணியின்போது சீன நீர்மூழ்கிக்கப்பல் நீரில் மூழ்கியது என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தென் சீனக்கடலில் சீனா, பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் போன்ற நாடுகள்உரிமை கொண்டாடி அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். இந்த சிக்கல்களை எதிர்கொள்ள, சீனா தனது கடற்படையை வலுப்படுத்தியுள்ளது. சீனாவிடம் 370க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள் உள்ளது. அந்த அடிப்படையில், அணுசக்தியால் இயக்கப்படும் நவீன நீர்மூழ்கிக்கப்பலை சீனா உருவாக்கி வருகிறது. இந்நிலையில் யாங்சே ஆற்றின் ஷுவாங்லியு கப்பல் கட்டும் தளத்தில், […]

கப்பல் கட்டுமான பணியின்போது சீன நீர்மூழ்கிக்கப்பல் நீரில் மூழ்கியது என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தென் சீனக்கடலில் சீனா, பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் போன்ற நாடுகள்உரிமை கொண்டாடி அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். இந்த சிக்கல்களை எதிர்கொள்ள, சீனா தனது கடற்படையை வலுப்படுத்தியுள்ளது. சீனாவிடம் 370க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள் உள்ளது.

அந்த அடிப்படையில், அணுசக்தியால் இயக்கப்படும் நவீன நீர்மூழ்கிக்கப்பலை சீனா உருவாக்கி வருகிறது. இந்நிலையில் யாங்சே ஆற்றின் ஷுவாங்லியு கப்பல் கட்டும் தளத்தில், கப்பல் கட்டுமான பணியின்போது நீர்மூழ்கிக்கப்பல் நீரில் மூழ்கியது என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கான செயற்கைக்கோள் படங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த சம்பவத்திற்கு சீன தூதரகம் எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை. மேலும் நீர்மூழ்கி கப்பலின் மூழ்கும் காரணம் மற்றும் அணு எரிபொருள் இருப்பதற்கான தகவல் தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu