நிலத்தடி நீரை மேம்படுத்த புதிய தடுப்பணைகள் - மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை

October 13, 2022

நிலத்தடி நீரை மேம்படுத்த புதிய தடுப்பணைகள் உட்பட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 124.94 லட்சம் வீடுகளில், 69.50 லட்சம் (55.63%) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் […]

நிலத்தடி நீரை மேம்படுத்த புதிய தடுப்பணைகள் உட்பட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 124.94 லட்சம் வீடுகளில், 69.50 லட்சம் (55.63%) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தேசிய சராசரியான 53.96 சதவீதத்தை விட அதிகம்.

இந்த ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டிற்கு தமிழகத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு 12.10 லட்சம் ஆகும். இலக்கை விட அதிகமாக 16.25 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு சாதனை எண்ணிக்கையை அடைந்துள்ளது. 2022-23-ம் ஆண்டு இலக்கு 28.48 லட்சம். இதுவரை 16.51 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நதி நீரினை உபயோகிக்கும் மாநிலங்களில், தமிழகம் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலமாகும். எனவே, குடிநீர் திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டத்தைக் கோரவும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுதல் பெருக்குதல் போன்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu