பத்திரப்பதிவின் போது போலி பதிவை தடுக்க புதிய வசதி தொடக்கம்

ஆவணப்பதிவின்போது போலி பதிவை தடுப்பதற்காக கைவிரல் ரேகை ஒப்பீடு செய்யும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆவணப்பதிவின்போது நடைபெறும் போலிகளை தடுப்பதற்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி இன்று ஒரு புதிய திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்படி ஆவண பதிவின் போது விரல் ரேகை ஒப்பீடு செய்யப்பட உள்ளது. அதாவது சொத்துக்களை பதிவு செய்யும் பொழுது ஆவணங்கள் குறித்த செய்திகள் ஆவணக்காரர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் சொத்தினை எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவர் […]

ஆவணப்பதிவின்போது போலி பதிவை தடுப்பதற்காக கைவிரல் ரேகை ஒப்பீடு செய்யும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

ஆவணப்பதிவின்போது நடைபெறும் போலிகளை தடுப்பதற்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி இன்று ஒரு புதிய திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்படி ஆவண பதிவின் போது விரல் ரேகை ஒப்பீடு செய்யப்பட உள்ளது. அதாவது சொத்துக்களை பதிவு செய்யும் பொழுது ஆவணங்கள் குறித்த செய்திகள் ஆவணக்காரர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் சொத்தினை எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவர் ஆகியோர்களின் விரல் ரேகை, ஆதார் மற்றும் கருவிழி படலங்கள் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட உள்ளன. இதன் மூலம் தவறான ஆவண பதிவுகள் மேற்கொள்வது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் சொத்து விற்பனையை மேற்கொள்ளும் பொழுது விற்பனை செய்யும் நபர் தனது விரல் ரேகையை பதிவு செய்வார். அப்பொழுது இதே சொத்து தொடர்பாக உள்ள முந்தைய ஆவணப்பதிவில் உரிமையாளர் செய்திருந்த விரல் ரேகை பதிவுடன் ஒப்பிடப்படும். இரண்டு விரல் ரேகைகளும் ஒத்தி இருக்கும் பட்சத்தில் மட்டுமே அடுத்ததாக ஆவண பதிவு செய்ய முடியும். இதன் மூலம் போலி ஆவணபதிவு தடுக்கப்படும்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu