இலங்கையில் புதிய இடைக்கால பிரதமராக டாக்டர் ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்,
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயகே வெற்றி பெற்றார். இதற்குப்பிறகு, பிரதமர் தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இடைக்கால பிரதமராக, தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நீதி, கல்வி, தொழில்துறை, அறிவியல், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் போன்ற முக்கிய துறைகளுக்கான மந்திரியாகவும் பணியாற்றுகிறார். இதன்மூலம் அமரசூரியா இலங்கையில் மூன்றாவது பெண் பிரதமராகிரார்.