தமிழ்நாடு அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆறு அமைச்சர்களின் இலாக்கக்கள் மாற்றப்பட்டுள்ளது.அதில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்றார். கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி R. ராஜேந்திரன் சுற்றுலாத்துறை, செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை, கோவி செழியன் உயர்கல்வித்துறை, மற்றும் சா.மு. நாசர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையைப் பெற்றுள்ளனர்