வியட்நாம் புதிய அதிபராக டோ லாம் பதவியேற்பு

May 22, 2024

வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக டோ லாம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் நாட்டின் முன்னாள் அதிபர் வோ வான் துவோங் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், டோ லாம் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். வியட்நாம் நாட்டின் முன்னாள் அதிபர் வோ வான் துவோங் மற்றும் ஆயிரக்கணக்கான அரசாங்க உறுப்பினர்கள் ஊழலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இது வியட்நாம் அரசியலில் எதிரொலித்து, துவோங் பதவி விலகினார். இதையடுத்து, துணை அதிபராக […]

வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக டோ லாம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் நாட்டின் முன்னாள் அதிபர் வோ வான் துவோங் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், டோ லாம் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்.

வியட்நாம் நாட்டின் முன்னாள் அதிபர் வோ வான் துவோங் மற்றும் ஆயிரக்கணக்கான அரசாங்க உறுப்பினர்கள் ஊழலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இது வியட்நாம் அரசியலில் எதிரொலித்து, துவோங் பதவி விலகினார். இதையடுத்து, துணை அதிபராக இருந்த டோ லாம், இன்று அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஊழலை எதிர்த்து உறுதியுடன் போராடுவதாக பதவி ஏற்பின் போது உறுதிமொழி ஏற்றார். இந்த நிலையில், அரசியல் போட்டியில் ஊழல் குற்றச்சாட்டை பயன்படுத்தி டோ லாம் அரியணை ஏறி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu