தலைமை தேர்தல் ஆணையர் , தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய வழிமுறை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தலைமை தேர்தல் ஆணையர் , தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய வழிமுறையை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நமது நாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் கள் மத்திய மந்திரிசபையின் ஆலோசனை, வழிகாட்டுதல் பேரில் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் , தேர்தல் ஆணையர் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படுகிற கொலீஜியம் (மூத்த நீதிபதிகள் குழு) போன்று, ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் […]

தலைமை தேர்தல் ஆணையர் , தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய வழிமுறையை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நமது நாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் கள் மத்திய மந்திரிசபையின் ஆலோசனை, வழிகாட்டுதல் பேரில் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் , தேர்தல் ஆணையர் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படுகிற கொலீஜியம் (மூத்த நீதிபதிகள் குழு) போன்று, ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகளைத் தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் தலைமை தேர்தல் கமிஷனரையும், தேர்தல் ஆணையர்களையும் பிரதமர், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகிய 3 பேரைக் கொண்ட குழுவின் ஆலோசனை பேரில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றுகிற வரையில் இந்த முறை நீடிக்கும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu