விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் 19 பேர் - புதிய வரலாறு

September 12, 2024

செப்டம்பர் 11, 2024 அன்று, 3 விண்வெளி வீரர்கள் ரஷ்யாவின் சோயுஸ் கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். இதன் மூலம், பூமியை சுற்றி வரும் மனிதர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 விண்வெளி வீரர்கள் இருந்த நிலையில், இவர்களின் வருகையால் இந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், போலாரிஸ் டான் பயணத்தில் 4 விண்வெளி வீரர்களும், சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் 3 […]

செப்டம்பர் 11, 2024 அன்று, 3 விண்வெளி வீரர்கள் ரஷ்யாவின் சோயுஸ் கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். இதன் மூலம், பூமியை சுற்றி வரும் மனிதர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 விண்வெளி வீரர்கள் இருந்த நிலையில், இவர்களின் வருகையால் இந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், போலாரிஸ் டான் பயணத்தில் 4 விண்வெளி வீரர்களும், சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் 3 விண்வெளி வீரர்களும் இருக்கின்றனர். எனவே, மொத்தம் 19 பேர் பூமியைச் சுற்றி வருகின்றனர். முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் 17 பேர் சுற்றுப்பாதையில் இருந்ததே அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளது. இது தவிர, 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் பூமியின் துணை சுற்றுப்பாதையில் விர்ஜின் கேலக்டிக் குழுவினர் பயணித்த போது, அவர்களையும் உள்ளடக்கி விண்வெளியில் 20 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu