இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்துக்கு டி காப்ரியோ பெயர்

October 25, 2024

இந்தியா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மேற்கு இமயமலையில் புதிய வகை பாம்பு இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய பாம்பு இனத்திற்கு, புகழ்பெற்ற நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரைக் கொண்ட Anguiculus dicaprioi அல்லது "DiCaprio's Himalayan snake" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாம்பு இனம் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் நேபாளத்தின் சித்வான் தேசியப் பூங்கா போன்ற பகுதிகளில் சுமார் 6,000 அடி உயரத்தில் வாழ்கிறது. இது […]

இந்தியா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மேற்கு இமயமலையில் புதிய வகை பாம்பு இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய பாம்பு இனத்திற்கு, புகழ்பெற்ற நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரைக் கொண்ட Anguiculus dicaprioi அல்லது "DiCaprio's Himalayan snake" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பாம்பு இனம் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் நேபாளத்தின் சித்வான் தேசியப் பூங்கா போன்ற பகுதிகளில் சுமார் 6,000 அடி உயரத்தில் வாழ்கிறது. இது அகன்ற காலர், கரும்புள்ளிகள் மற்றும் குவிமாட முகப்புடன் 22 அங்குலங்கள் வரை வளரும். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் HT லால்ரெம்சங்கா, ஜீஷன் மிர்சா, வீரேந்திர பரத்வாஜ் உள்ளிட்ட பலர் அடங்குவர். இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்த விரிவான தகவல்கள் சைன்டிபிக் ரிப்போர்ட்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu