இந்தியாவில் நடக்கும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்காக புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா மற்றும் ஆட்டம்பர்க் டெக்னாலஜிஸ் நிறுவனங்களை நடப்பு ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற உள்ள அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று நடைபெறவுள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ஆரம்பம் ஆகிறது.