கங்கனா ரனாவத் பாராளுமன்ற தகவல் தொடர்பு கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்திற்கான நிலைக்குழுக்களில் மாற்றங்கள் நடைபெற்று, முக்கியமான 24 கமிட்டிகள் புதிய அமைப்புக்களை அடைந்துள்ளன. அதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாதுகாப்பு விவகார கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கமிட்டியின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே நியமிக்கப்பட்டுள்ளார். அதில் நடிகை கங்கனா ரனாவத் உறுப்பினராக உள்ளார். இன்னும் பல முக்கிய கமிட்டிகளில் சசி தரூர், ராம் கோபால் யாதவ் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.