கொரோனாவுக்குப் பின் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப் பார்வை - ஆய்வறிக்கை

September 26, 2024

ஒரு புதிய ஆய்வின்படி, உலகளவில் குழந்தைகளின் பார்வை மோசமாகி வருவது தெரியவந்துள்ளது. மூன்றில் ஒரு குழந்தை கிட்டப்பார்வை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. கொரோனா தொற்று நோய் காலத்தில் திரை நேரம் அதிகரித்ததும், வெளியில் விளையாடும் நேரம் குறைந்ததும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆசிய நாடுகளில் இந்த பிரச்சனை மிகவும் தீவிரமாக உள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பெரும்பாலான குழந்தைகள் கிட்டப் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து உலகளாவிய […]

ஒரு புதிய ஆய்வின்படி, உலகளவில் குழந்தைகளின் பார்வை மோசமாகி வருவது தெரியவந்துள்ளது. மூன்றில் ஒரு குழந்தை கிட்டப்பார்வை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. கொரோனா தொற்று நோய் காலத்தில் திரை நேரம் அதிகரித்ததும், வெளியில் விளையாடும் நேரம் குறைந்ததும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆசிய நாடுகளில் இந்த பிரச்சனை மிகவும் தீவிரமாக உள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பெரும்பாலான குழந்தைகள் கிட்டப் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து உலகளாவிய கிட்டப்பார்வை விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், 2050-ம் ஆண்டில் உலகின் பாதி இளைஞர்கள் கிட்டப் பார்வையால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளின் பார்வை மோசமாவதை தடுக்க, அவர்கள் தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் வெளியில் விளையாடுவது அவசியம் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu