இங்கிலாந்தின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் புகைப்படம் இடம் பெற்ற காகித நோட்டுகள் 2024 ஆம் ஆண்டில் புழக்கத்திற்கு வரும் என்று இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதுவரையில், பிரிட்டன் மக்கள், தற்போதைய காகித நோட்டுகளை பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளது. அத்துடன், மன்னரின் புகைப்படம் இடம்பெற்ற புதிய நோட்டுகளின் வடிவமைப்புகளை வெளியிட்டுள்ளது.
“தற்போது, இங்கிலாந்தில் புழக்கத்தில் உள்ள 5, 10, 20 மற்றும் 50 பவுண்டு பாலிமர் காகிதத் தாள்களில், ராணி எலிசபெத் புகைப்படம் இருந்த இடத்தில், மூன்றாம் சார்லஸின் புகைப்படம் இடம்பெறும். இதைத் தவிர, வேறு எந்த மாறுதல்களும் வடிவமைப்பில் மேற்கொள்ளப்படவில்லை” என இங்கிலாந்து வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.