இங்கிலாந்து அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம் ரத்து - பிரதமர் ஸ்டார்மர்

July 9, 2024

சட்ட விரோதமாக இங்கிலாந்துக்குள் குடிபெயர்ந்தவர்கள் விமானம் வாயிலாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற சட்டத்தை பிரதமர் ஸ்டார்மர் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். சமீப காலமாக பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். 2021-க்கு முன் நான்காண்டுகளில் 299 பேர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் குடியேறினர். ஆனால் 2022 ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் 45,774 பேர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்தனர். இதனை கட்டுப்படுத்த இயலாமல் இங்கிலாந்து அரசு தவித்து […]

சட்ட விரோதமாக இங்கிலாந்துக்குள் குடிபெயர்ந்தவர்கள் விமானம் வாயிலாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற சட்டத்தை பிரதமர் ஸ்டார்மர் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

சமீப காலமாக பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். 2021-க்கு முன் நான்காண்டுகளில் 299 பேர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் குடியேறினர். ஆனால் 2022 ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் 45,774 பேர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்தனர். இதனை கட்டுப்படுத்த இயலாமல் இங்கிலாந்து அரசு தவித்து வந்தது. இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த முன்னாள் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த சட்டத்தின்படி சட்ட விரோதமாக இங்கிலாந்துக்குள் குடிபெயர்ந்தவர்கள் விமானம் வாயிலாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதுதான். இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu