ரிசர்வ் வங்கி, யுபிஐ மூலம் பிரதிநிதி பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஒரு நபர் தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி மற்றொரு நபர் பணம் செலுத்தும் அளவை நிர்ணயம் செய்ய முடியும். அதாவது, ஒரு நபர் தனது வங்கிக் கணக்கை தனது குடும்ப உறுப்பினர், நண்பர் போன்ற மற்றொரு நபருக்கு பயன்படுத்த அனுமதிக்கலாம். இதன் மூலம், நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார். இந்த புதிய அம்சம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.