கடந்த 2020இல் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் படிப்படியாக விலகி உள்ளது. இந்த சூழலில் “அடுத்த பெருந்தொற்று ஏற்படப்போவது உறுதி; அதனை தவிர்க்க முடியாது” என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் ஆவார். அவர், உலகம் அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். “அடுத்த பெருந்தொற்று ஏற்பட போவது உறுதி. அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும். ஏற்கனவே, ஜி 7 மற்றும் ஜி-20 மாநாடுகளில் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் முனைப்பு காட்ட உலக நாடுகள் உறுதி ஏற்றன. ஆனால், எந்த நடவடிக்கைகளும் முழுதாக நடைபெறவில்லை. இந்நிலையில், வரவிருக்கும் ஆபத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது” என்று கூறியுள்ளார்.