அடுத்த ஆண்டு பெண்களுக்கான மகளிர் ஜல்லிக்கட்டு

March 26, 2024

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பெண்களுக்கான மகளிர் ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஆண்களுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெண்களும் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டியை விமர்சையாக நடத்த சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டு இருந்தன. இதுகுறித்து சுற்றுலா நிறுவனர் கூறுகையில் அடுத்த வருட பொங்கல் பண்டிகையின் போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் முடிவடைந்த பின் […]

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பெண்களுக்கான மகளிர் ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஆண்களுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெண்களும் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டியை விமர்சையாக நடத்த சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டு இருந்தன. இதுகுறித்து சுற்றுலா நிறுவனர் கூறுகையில் அடுத்த வருட பொங்கல் பண்டிகையின் போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் முடிவடைந்த பின் அருகே உள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் மகளிர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பெண்களுக்கு பெண் போலீசார், கபடி வீராங்கனைகள், கல்லூரி மாணவிகள் ஆர்வமாக முன்வந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது முதல் மகளிர் ஜல்லிக்கட்டு என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட உள்ளது. அதற்கான வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆண்களுக்கு வழங்குவது போல் ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்களுக்கு கார், பைக் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளை வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu