இந்திய பங்குச் சந்தை இன்று வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 84928.61 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 25939.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஐடிசி, அதானி பவர், டாடா மோட்டார்ஸ், வோடபோன், ஜொமாட்டோ, ஹெச் டி எஃப் சி வங்கி, கல்யாண் ஜுவல்லர்ஸ், பேங்க் ஆப் மகாராஷ்டிரா போன்றவை உயர்ந்துள்ளன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்றவை சரிந்துள்ளன.