நைஜீரியாவில் ஆற்றுக்குள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் பலியாகினர். சுமார் 100 பேர் மாயமாகினர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகு பகுதியில் இருந்து கெப்பி மாகாணத்தில் நைஜர் ஆற்றின் வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் எட்டு பேர் பலியாகினர். சுமார் 100 பேர் மாயமாகினர். அப்படகில் அதிக அளவில் மக்கள் இருந்ததே இந்த விபத்திற்கு காரணம். அதோடு அதிக சுமைகளும் இருந்தது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். காற்று பலமாக வீசியதால் படகு தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.