நைஜீரியாவில் 20 மருத்துவ மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் மைடுகுரி மற்றும் ஜோஸ் நகரங்களை சேர்ந்த மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேர் நேற்று அந்நாட்டின் பிணியூ நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க பேருந்தில் சென்றனர். அப்பொழுது துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று திடீரென்று பேருந்த இடைமறித்தது. பின்னர் துப்பாக்கி முனையில் 20 மாணவர்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மாணவர்களை தேடி வருகின்றனர். நைஜீரியாவில் பல்வேறு கடத்தல் கும்பல்கள் உள்ளன. இந்த கும்பல் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை கடத்தி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.