காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றம் - கனடா நடவடிக்கை

September 19, 2023

காலிஸ்தான் தலைவராக அறியப்படும் ஹர்தீப் சிங் நிஜார், சில மாதங்களுக்கு முன்னால் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராய்க்கு தொடர்புடையதாக கனடா குற்றம் சாட்டி உள்ளது. அதன்படி, அவர் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசி உள்ளார். அதில், "காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்திய அதிகாரிக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளது" என்று கூறியுள்ளார். […]

காலிஸ்தான் தலைவராக அறியப்படும் ஹர்தீப் சிங் நிஜார், சில மாதங்களுக்கு முன்னால் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராய்க்கு தொடர்புடையதாக கனடா குற்றம் சாட்டி உள்ளது. அதன்படி, அவர் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசி உள்ளார். அதில், "காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்திய அதிகாரிக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளது" என்று கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரி பவன் குமார் ராய் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ரா பிரிவின் தலைவராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அதிகாரி மீது கனடா எடுத்து இருக்கும் இந்த நடவடிக்கையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu