அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நடந்து வரும் போட்டியிலிருந்து நிக்கி ஹாலே விலகியுள்ளார்.
அங்கு 15 மாகாணங்களில் நடைபெற்ற உட்கட்சி போட்டியில் அவர் தோல்வியடைந்தார். அதை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதையடுத்து அந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இது குறித்து நீக்கி கூறியதாவது, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான எனது முயற்சிகளை நிறுத்தி விட்டேன். நான் போட்டியிலிருந்து விலகுகிறேன். இருப்பினும் என் கொள்கைகளுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். நிக்கியின் இந்த முடிவை படுதோல்வி என டிரம்ப் விமர்சித்துள்ளார். அதோடு நிக்கியின் ஆதரவாளர்கள் இனி தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.