நிலையான வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல் பேங்க்

April 29, 2022

புதுடில்லி, ஏப்ரல் 28, 2022: இந்தியாவில் பல்வேறு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் நிலையான வைப்பு நிதி திட்டத்தை (FD) செயல்படுத்தி வரும் நிலையில், ஏர்டெல் பேங்க் இதில் புதிதாக இணைந்துள்ளது.

புதுடில்லி, ஏப்ரல் 28, 2022:
இந்தியாவில் பல்வேறு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் நிலையான வைப்பு நிதி திட்டத்தை (FD) செயல்படுத்தி வரும் நிலையில், ஏர்டெல் பேங்க் இதில் புதிதாக இணைந்துள்ளது. இன்டஸ் இன்ட் வங்கியுடன் ஏர்டெல் பேமென்ட் வங்கி கூட்டணி அமைத்து, தனது வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், 60 வயதிற்கு உட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 6.5 சதவீதமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 7 சதவிகிதமும் வட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் வைப்பு நிதிக்கான கால அளவை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும், நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு முன்னதாகவே பணத்தை எவ்வித அபராதமும் இன்றி எடுத்துக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. ஏர்டெல் வங்கிக்கு, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5 லட்சம் வங்கி சேவை மையங்கள் உள்ளன என்பதும், இன்டஸ் இன்ட் வங்கிக்கு இந்தியாவில் 2103 கிளைகளும், 2816 ஏடிஎம்களும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu