ஜெரோதா நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் நிதின் காமத் உட்பட முக்கிய இயக்குனர்களுக்கு மத்திய அரசு அபராதம் விதித்துள்ளது.
ஜெரோதா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் வழங்கிய காலக்கெடுவிற்குள் தலைமை நிதி அதிகாரியை நியமனம் செய்யவில்லை. அது காலதாமதப்படுத்தியது. இதற்காக அந்த நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் நிதின் காமத் உட்பட அதன் முக்கிய இயக்குனர்களுக்கு மத்திய அரசு அபராதம் விதித்துள்ளது. ரூபாய் 10 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு மூலதனம் கொண்ட ஒரு பொது நிறுவனம், நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 2003-ன் படி ஒரு தலைமை நிதி அதிகாரி உட்பட பல முக்கிய நிர்வாக பணியாளர்களை வைத்திருக்க வேண்டும்.
ஆனால் ஜெரோதா நிறுவனம் 2021 டிசம்பர் முதல் 2023 மார்ச் வரை இந்த சட்டத்தின் கீழ் இந்த விதிமுறையை பின்பற்றவில்லை. 459 நாட்கள் தாமதமாக தலைமை நிதி அதிகாரி சித்தன் பாட் என்பவரை நியமித்தது. எனவே அந்த நிறுவனத்திற்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் நித்தின் காமத்திற்கு ரூ. 4.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதன் இயக்குனர் ராஜன்னாவுக்கு 5 லட்சமும், தலைமை நிர்வாக அதிகாரி விஷாலுக்கு ரூ.3.45 லட்சமும் நிறுவனத்தின் செயலாளர் சிகாசிங்க்கு ரூ.3.45 லட்சம், அதன் இயக்குனர்கள் ஈஸ்வரன் மற்றும் மகாஜனுக்கு தலா ரூ.1.50 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.