ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் ரிசர்வ் வங்கியின் பயணம் இந்திய பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அதனை கற்றுக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், புதுமைப்படுத்தவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். ஆகவே ரெப்போ வட்டி வீதத்தை 6.5 சதவீதமாக தொடர்ந்து நீட்டிக்க முடிவு செய்துள்ளது […]

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் ரிசர்வ் வங்கியின் பயணம் இந்திய பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அதனை கற்றுக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், புதுமைப்படுத்தவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். ஆகவே ரெப்போ வட்டி வீதத்தை 6.5 சதவீதமாக தொடர்ந்து நீட்டிக்க முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் உலகளாவிய கடன் ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம். கிராமப்புற தேவை மற்றும் நுகர்வு 2025 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் 2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது என பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu