பங்குச் சந்தை ஏற்ற இறக்கமின்றி நிறைவு

August 22, 2023

இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்று, ஏற்றம் பெற்ற இந்திய பங்குச்சந்தை, இன்றுஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணில் 3.94 புள்ளிகள் மட்டுமே உயர்வு பதிவாகியுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண்ணில் 2.85 புள்ளிகள் மட்டுமே உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், சென்செக்ஸ் 65220.03 புள்ளிகள் ஆகவும், நிஃப்டி 19396.45 புள்ளிகள் ஆகவும் உள்ளன. இன்றைய பங்குச் சந்தையில், அதானி குழும […]

இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்று, ஏற்றம் பெற்ற இந்திய பங்குச்சந்தை, இன்றுஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணில் 3.94 புள்ளிகள் மட்டுமே உயர்வு பதிவாகியுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண்ணில் 2.85 புள்ளிகள் மட்டுமே உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், சென்செக்ஸ் 65220.03 புள்ளிகள் ஆகவும், நிஃப்டி 19396.45 புள்ளிகள் ஆகவும் உள்ளன.

இன்றைய பங்குச் சந்தையில், அதானி குழும பங்குகள் பெரும் ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. அதானி எண்டர்பிரைசஸ் 2.2% உயர்வை பதிவு செய்துள்ளது. இது தவிர, ஐடிசி, என்டிபிசி,ஹெச் டி எப் சி லைஃப், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவையும் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், பிபிசிஎல், சிப்லா, பஜாஜ் பின்சர்வ், ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், எஸ் பி ஐ ஆகியவை இறக்கமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu