நேற்று மக்களவையில் பா. ஜ.க. விற்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
நேற்று மக்களவில் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் எதிர்கட்சிகள் புறக்கணித்தனர். இதனால் போதிய ஆதரவு இல்லாததன் காரணமாக பா. ஜ.க. விற்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
மக்களவையின் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து வந்தார். அதனை தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடை பெற்றது. இதில் எதிர்கட்சிகளின் போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.