ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு அனுப்ப பிரிட்டன் மறுப்பு

March 27, 2024

விக்கிலீக்ஸ் வலைதளத்தை நிறுவிய ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையில் உள்ளார். இந்த நிலையில், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதி அளிக்குமாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த பிரிட்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அரசின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக அசாஞ்சே மீது அமெரிக்கா குற்றம் சுமத்தி உள்ளது. மேலும், 2010 ஆம் ஆண்டில் பாலியல் வழக்கு தொடர்பாக பிரிட்டனில் அவர் கைது செய்யப்பட்டார். பிறகு, ஈக்வடாரில் […]

விக்கிலீக்ஸ் வலைதளத்தை நிறுவிய ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையில் உள்ளார். இந்த நிலையில், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதி அளிக்குமாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த பிரிட்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக அசாஞ்சே மீது அமெரிக்கா குற்றம் சுமத்தி உள்ளது. மேலும், 2010 ஆம் ஆண்டில் பாலியல் வழக்கு தொடர்பாக பிரிட்டனில் அவர் கைது செய்யப்பட்டார். பிறகு, ஈக்வடாரில் தஞ்சம் அடைந்த அவர், ஜாமீன் நிபந்தனைகளை மீறியது தொடர்பாக மீண்டும் பிரிட்டனால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், “அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால், அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என உத்தரவாதம் தர வேண்டும். அதற்கு பிறகு அவரை நாடு கடத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும்” - இவ்வாறு பிரிட்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu