பதவியேற்பு உறுதி மொழியில் இனி முழக்கங்கள் கூடாது - சபாநாயகர்

பதவியேற்பில் எம்.பிக்கள் உறுதிமொழி எடுக்கும் பொழுது இனி முழக்கங்கள் கூடாது என்று சபாநாயகர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் மக்களவை உறுப்பினராக ஒரு வாரத்திற்கு முன்பு பதவி ஏற்று கொண்டனர். இதில் பதவியேற்பின் பொழுது எம்.பிக்கள் உறுதிமொழி எடுப்பார்கள். அப்பொழுது ஜெய்ஹிந்த், ஜெய் அரசமைப்பு என்று கோஷம் எழுப்பினர். இதில் திமுகவைச் சேர்ந்த சிலர் வாழ்க பெரியார், வாழ்க கருணாநிதி, வாழ்க மு.க ஸ்டாலின் போன்ற கோஷங்களை எழுப்பினர். அதேபோன்று ஹைதராபாத் […]

பதவியேற்பில் எம்.பிக்கள் உறுதிமொழி எடுக்கும் பொழுது இனி முழக்கங்கள் கூடாது என்று சபாநாயகர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்றத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் மக்களவை உறுப்பினராக ஒரு வாரத்திற்கு முன்பு பதவி ஏற்று கொண்டனர். இதில் பதவியேற்பின் பொழுது எம்.பிக்கள் உறுதிமொழி எடுப்பார்கள். அப்பொழுது ஜெய்ஹிந்த், ஜெய் அரசமைப்பு என்று கோஷம் எழுப்பினர். இதில் திமுகவைச் சேர்ந்த சிலர் வாழ்க பெரியார், வாழ்க கருணாநிதி, வாழ்க மு.க ஸ்டாலின் போன்ற கோஷங்களை எழுப்பினர். அதேபோன்று ஹைதராபாத் தொகுதி எம்.பி பதவியேற்பின் போது ஜெய் பாலஸ்தீனம் என்று கோஷமிட்டார். பலர் பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டபடி உறுதிமொழி ஏற்றனர். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா இனி உறுதிமொழி ஏற்பின் பொழுது எவ்வித கோஷங்களையும் எழுப்பக் கூடாது என்று உறுதிமொழி ஏற்பில் திருத்தம் கொண்டுவந்துள்ளார். மேலும் நடைமுறையில் இல்லாத ஒன்றை பின்பற்றக் கூடாது என்றும் உறுதிமொழிக்கான படிவத்தின் முன்பாகவும் பின்பாகவும் எவ்வித வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu