செல்போன் டவர்கள் இல்லாமலேயே செயற்கைக்கோள்கள் மூலம் செல்போன் அழைப்புகளை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொலைத்தொடர்பு துறையில் அடுத்த அத்தியாயத்தை தொடங்கும் என கருதப்படுகிறது.
பேரிடர் காலங்களில் செல்போன் டவர்கள் பாதிப்படைகின்றன. அதனால், தொலைத்தொடர்பு சேவைகளை மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கான தீர்வாக, செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்புகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, சீனாவின் ஹூவாய் நிறுவனம் புதிய செல்போன் மாடலை அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து, ஷாவ்மி, ஆனர், ஒப்போ போன்ற நிறுவனங்களும் செயற்கைக்கோள் வழியான செல்போன் அழைப்பு தொழில்நுட்பத்தை தங்கள் கைபேசிகளில் புகுத்தி வருகின்றன. அதன்படி, இந்த தொழில்நுட்பம் படிப்படியாக பொது பயன்பாட்டுக்கு வரும் என கருதப்படுகிறது.