நீட் மறு தேர்வு இல்லை உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேட்டின் காரணமாக மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் தேர்வு கேள்வி வினாத்தாள்கள் வெளியானதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் 60க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண் பெற்றனர் என்றும் மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது. இதனை அடுத்து இந்த வழக்கினை மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. அதேபோன்று நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். […]

நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேட்டின் காரணமாக மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.

நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் தேர்வு கேள்வி வினாத்தாள்கள் வெளியானதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் 60க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண் பெற்றனர் என்றும் மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது. இதனை அடுத்து இந்த வழக்கினை மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. அதேபோன்று நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் மீதான இன்றைய விசாரணையின் போது நீட் மறு தேர்வு மீண்டும் நடத்த முடியாது. தேர்வுக்கான புனிதம் மீறப்பட்டதாக முடிவுக்கு வர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 23.33 இலட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் அது மிகப்பெரிய விளைவு ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த சிஸ்டமும் மீறப்பட்டுள்ளது. அல்லது தேர்வின் புனிதம் மீறப்பட்டுள்ளது என்று முடிவுக்கு தற்போதைய நிலையில் வருவது மிகவும் கடினமானதாக உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu