பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பொதுத் தேர்வு ஏற்கனவே முடிந்த முடிவடைந்து விட்ட நிலையில் அவர்களது கோடை விடுமுறை தொடங்குகி உள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை நாட்களில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தொடர் புகார்கள் கல்வித்துறைக்கு எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த புகாரை தொடர்ந்து கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கோடை விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களில் சிறப்பு பள்ளிகள் நடத்துவதால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவை கண்டிப்பாக அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.