ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் சீன பிரதமர் லீ கியாங்க்

September 4, 2023

உலக நாடுகள் பங்கேற்கும் ஜி 20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பர் 9, 10 ஆம் தேதிகளில், புது டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், சீனா சார்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சீனா சார்பில், அந்நாட்டின் பிரதமர் லீ கியாங்க் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டில் கலந்து கொள்ளாததற்கான […]

உலக நாடுகள் பங்கேற்கும் ஜி 20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பர் 9, 10 ஆம் தேதிகளில், புது டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், சீனா சார்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சீனா சார்பில், அந்நாட்டின் பிரதமர் லீ கியாங்க் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டில் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து வெளியுறவு அமைச்சகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

 

சீனப் பிரதமர் லீ கியாங்க் கடந்த மார்ச் மாதம் அரியணை ஏறினார். அதன் பிறகு, அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மாநாட்டில் கலந்து கொள்ளாததாக அறிவிக்கப்பட்டது. தற்போது, சீன அதிபரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி ஜின்பிங் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்..

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu