அரசாங்கத்துக்கான டிஜிட்டல் சேவைகளை வழங்க நோக்கியா மற்றும் ஸ்டெர்லைட் கூட்டணி

March 4, 2024

நோக்கியா மற்றும் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டணியில் இணைந்துள்ளன. அரசாங்கத்துக்கான டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு தேவையான நெட்வொர்க்கிங் சேவையும் இந்தக் கூட்டணி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நான்காவது தொழில்துறை புரட்சியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. தற்போதைய தொழில்நுட்ப சூழலுக்கு தேவையான 5ஜி நெட்வொர்க் சேவைகள், டேட்டா சென்டர் சேவைகள், வலுவான விநியோகச் சங்கிலி கட்டமைப்புகள், இணைய வசதிகள், ஜெனரேடிவ் ஏஐ சார்ந்த பல்வேறு […]

நோக்கியா மற்றும் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டணியில் இணைந்துள்ளன. அரசாங்கத்துக்கான டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு தேவையான நெட்வொர்க்கிங் சேவையும் இந்தக் கூட்டணி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நான்காவது தொழில்துறை புரட்சியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

தற்போதைய தொழில்நுட்ப சூழலுக்கு தேவையான 5ஜி நெட்வொர்க் சேவைகள், டேட்டா சென்டர் சேவைகள், வலுவான விநியோகச் சங்கிலி கட்டமைப்புகள், இணைய வசதிகள், ஜெனரேடிவ் ஏஐ சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்குவது மிக முக்கியமானதாகும். அரசாங்கம் சார்ந்த நடவடிக்கைகளில் இத்தகைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் மற்றும் நோக்கியா ஆகிய நிறுவனங்கள் கூட்டணியில் இணைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu