வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. தென் கொரியா விற்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு .தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இதனால் அவ்வப்போது வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி வரும்.
இந்நிலையில், சமீபத்தில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானமான பி1- பி விமானமும் ஈடுபடுத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை தென்கொரியாவின் கிழக்கு கடற் பகுதியில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தென் கொரியா கொரியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.