வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த தூக்கு தண்டனை குறித்த செய்திகள் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த நிலையில், தங்கள் நாட்டின் நற்பெயரை சேதப்படுத்த, தென் கொரியா வேண்டுமென்றே தூக்கு தண்டனை குறித்த வதந்திகளை பரப்புகிறது என வடகொரியா தெரிவித்துள்ளது.
வாடா கொரியாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர் இழப்பு, சொத்து நஷ்டம் மிகப் பெரிய அளவில் உள்ளது. வெள்ளப் பேரிடரை சமாளிக்கத் தவறியதற்காக அரசு அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் கடமை மறப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 20 முதல் 30 பேர் வரை தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை, வட கொரிய அதிபர் கிம் ஜான் உன் மறுத்துள்ளார்.