நத்திங் போன் 2ஏ - சிறப்பு அம்சங்கள்

நத்திங் நிறுவனத்தின் 2ஏ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன் பிளஸ் நிறுவனத்தில் இருந்து விலகி நத்திங் நிறுவனத்தை கார்ல் பெய் தொடங்கினார். கடந்த 2022 ஜூலை முதல், இந்திய சந்தையில் அவரது நத்திங் நிறுவனத்தின் கைபேசிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தியர்கள் மத்தியில் நத்திங் கைபேசிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிதாக நத்திங் போன் 2ஏ வெளியாகி உள்ளது. இந்திய மதிப்பில் இதன் ஆரம்ப விலை 23999 என சொல்லப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு […]

நத்திங் நிறுவனத்தின் 2ஏ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன் பிளஸ் நிறுவனத்தில் இருந்து விலகி நத்திங் நிறுவனத்தை கார்ல் பெய் தொடங்கினார். கடந்த 2022 ஜூலை முதல், இந்திய சந்தையில் அவரது நத்திங் நிறுவனத்தின் கைபேசிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தியர்கள் மத்தியில் நத்திங் கைபேசிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிதாக நத்திங் போன் 2ஏ வெளியாகி உள்ளது. இந்திய மதிப்பில் இதன் ஆரம்ப விலை 23999 என சொல்லப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் செயல்படும் இந்த கைபேசியில், 50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. 8 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு, 8 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு, 12 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு ஆகிய மூன்று வேரியண்ட்களில் இந்த கைப்பேசி வெளியாகி உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த கைபேசியில் 5,000 எம்ஏஎச் பேட்டரி திறன் மற்றும் 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன் உள்ளது. இந்த கைபேசியின் அமொல்ட் டிஸ்பிளே அளவு 6.7 இன்ச் ஆகும்

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 212

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu