பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நோவக் ஜோகோவிச் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இறுதி தொடரில் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-6(7-3),7-6(7-2) என்ற செட்டில் வீழ்த்தி டென்னிஸ் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.