பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைத்துள்ளதாக புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் எல்லையையொட்டிய பெலாரஸ் நாட்டில் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை அந்நாட்டுக்கு ரஷியா அனுப்ப முடிவு செய்தது. இதுபற்றி பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறும்போது, ரஷியாவிடம் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றின் முதல் பகுதி வந்தடைந்து உள்ளது. ஒரு தடுப்பு நடவடிக்கைக்காகவே இவை குவிக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளதாக தி ஹில் பத்திரிகை தெரிவித்து உள்ளது.