நைக்கா நிறுவனம், தனது முன்னாள் தலைமை வணிக அதிகாரி கோபால் அஸ்தானா மீது ரகசிய தகவல் கசிவு மற்றும் தனியுரிமை தரவுகளை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளது. அஸ்தானா தற்போது டாடா கிளிக் நிறுவனத்தின் ஃபேஷன் வணிகத்திற்கு தலைமை தாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்தானா, ஜூன் 2023 ல் நைக்காவை விட்டு வெளியேறி டாடா கிளிக்கில் இணைந்தார். நைக்கா ஊழியர்களை டாடா கிளிக்கில் சேர ஊக்குவிப்பதாக நைக்கா சார்பில் அஸ்தானா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், ஊழியர் பங்கு விருப்பப் பலன்களில் ₹19 கோடி உட்பட மொத்தம் ₹24 கோடி பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த வழக்கில், நைக்கா ஊழியர்களை டாடா கிளிக்கில் நியமிக்க அஸ்தானாவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.