அதானி குழுமத்தை தொடர்ந்து வேதாந்தா குழுமம் மீது ஓசிசிஆர்பி அறிக்கை

September 1, 2023

அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளை சுட்டிக்காட்டி ஓசிசிஆர்பி அறிக்கை அண்மையில் வெளியானது. தற்போது, வேதாந்தா குழுமத்தின் மோசடிகளை ஓசிசிஆர்பி அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலின் போது, இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் இருந்தார். அப்போது, வேதாந்தா குழுமத்தின் சுரங்கங்களில் உற்பத்தியை அதிகரிக்க அனுமதிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என வேதாந்தா தெரிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறும்படி முன்மொழியப்பட்டதாகும். இந்த விவரத்தை ஓசிசிஆர்பி அறிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் […]

அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளை சுட்டிக்காட்டி ஓசிசிஆர்பி அறிக்கை அண்மையில் வெளியானது. தற்போது, வேதாந்தா குழுமத்தின் மோசடிகளை ஓசிசிஆர்பி அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலின் போது, இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் இருந்தார். அப்போது, வேதாந்தா குழுமத்தின் சுரங்கங்களில் உற்பத்தியை அதிகரிக்க அனுமதிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என வேதாந்தா தெரிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறும்படி முன்மொழியப்பட்டதாகும். இந்த விவரத்தை ஓசிசிஆர்பி அறிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டது குறித்து, வேதாந்தா குழுமத்திடம் கேள்வி எழுப்பியதாக ஓசிசிஆர்பி அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கு, ‘நாட்டின் நலன் கருதி இந்த திட்டங்கள் முன்மொழிக்கப்பட்டதாக’ வேதாந்தா தெரிவித்துள்ளது. வேதாந்தாவுக்கு எதிராக வெளியாகியுள்ள இந்த அறிக்கை, இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu